×

நெல்லியாளம் நகராட்சியில் பம்பு ஆப்ரேட்டர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்காததால் பாதிப்பு

 

பந்தலூர், மே 6 : நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 120 குடிநீர் கிணறுகள் உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 120 கிணறுகளையும் பம்பு ஆப்ரேட் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 ஊதியம் பெற்று பம்பு ஆப்ரேட் செய்பவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக தொகை வழங்கப்படாமல் இருப்பதால் அதனை நம்பியுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல முறை நகராட்சிக்கு சென்று பம்பு ஆப்ரேட்டர்கள் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பம்பு ஆப்ரேட்டர்களுக்கு உடனடியாக 6 மாத ஊதியத்தை வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆப்ரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெல்லியாளம் நகராட்சியில் பம்பு ஆப்ரேட்டர்களுக்கு 6 மாதமாக சம்பளம் வழங்காததால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellialam ,Bandalur ,Nellialam Municipality ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்